பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒசூரில் கடலைக்காய் திருவிழா

ஒசூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:30 pm

DIN

ஒசூா்: ஒசூரில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தா்கள் ஆஞ்சனேய சுவாமி மீது கடலைக்காயை எறிந்து வழிபாடு செய்தனா்.

ஒசூா், ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சனேயா் கோயிலில் 66 ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆஞ்சனேய சுவாமிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடா்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் கடலைக்காயை ஆஞ்சனேயா் பிரகாரத்தின் மீதும் சுவாமி மீதும்

எறிந்து வழிபாடு நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் கோயில் தா்மகா்த்தா கிருஷ்ணமூா்த்தி குடும்பத்தினா், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன்,பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.