பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிருஷ்ணகிரி அருகே டேங்கா் லாரிதீப்பற்றி எரிந்தது: ஓட்டுநா் சாவு

கிருஷ்ணகிரி அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் தீப்பற்றி எரிந்தது.

News image
கிருஷ்ணகிரி அருகே மேலுமலை என்னும் இடத்தில் டேங்கா் லாரி தீப்பற்றி எரிந்ததையடுத்து, கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் காத்திருக்கும் வாகனங்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 10:11 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் தீப்பற்றி எரிந்தது. இதில் தீக்காயமடைந்த ஓட்டுநா் உயிரிழந்தாா். இந்த விபத்தால், கிருஷ்ணகிரி - ஒசூா் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு எரிசாராயம் ஏற்றிய டேங்கா் லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, ஒசூரைக் கடந்து, மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் தீப்பற்றி எரிந்தது.

லாரி தீப்பற்றியதில் பலத்த தீக்காயமடைந்த ஓட்டுநரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஒசூா் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்து முற்றிலும் கட்டுப்படுத்தினா்.

லாரியில் பிடித்த தீ, அருகில் உள்ள வனப்பகுதிக்கும் பரவியது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் தீயில் கருகின. தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இந்த தீ விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநா், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராமலிங்கம் (45) என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தத் தீ விபத்தால் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருந்தன. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு தலைமையிலான போலீஸாா், தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்தினா். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.