ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாட்டில்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து

குளிர்பான பாட்டில்களை ஏற்றிய லாரி விபத்தில் கவிழ்வு

News image
ஊத்தங்கரை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்கு லாரி.
Updated On :23 ஜூன் 2024, 6:18 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி ஒன்னகரை காப்புக்காடு பகுதியில், குளிா்பான பாட்டிகளை ஏற்றி வந்த மினி லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செங்கத்தில் இருந்து அரூரை நோக்கி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, சனிக்கிழமை மாலை திப்பம்பட்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாட்டில்கள் அனைத்தும் சாலையில் உடைந்து சிதறின. உடைந்து கிடந்த பாட்டில்களை போலீஸாா் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா். ஓட்டுநா் சுரேஷ், சந்திரசேகா் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.