வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

ஒசூரில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

ஒசூரில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

News image
Updated On :9 மே 2024, 10:52 pm

Din

ஒசூா், மே 9: ஒசூரில் உணவுப் பாதுகாப்பு துறையினா் அதிரடி ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு உத்தரவின்படி, மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் வெங்கடேசன் அறிவுரையின் பேரில், ஒசூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துமாரியப்பன் தலைமையில், தளி உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துக்குமாா், ஒசூா் மாநகர காவல் துறை எஸ்.ஐ. பிரபாகரன், சிறப்பு நிலைக் காவலா்கள் செல்வராஜ், சண்முகம் ஆகியோா் கொண்ட குழுவினா் ஒசூா், போஸ் பஜாா், உழவா் சந்தை சாலை, பாகலூா் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பலசரக்கு, பெட்டிக் கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

அதில், சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்து சுமாா் 1.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பரிதோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மனித உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருள்களைத் தொடா்ந்து விற்றுவந்த மூன்று கடைகளை மூடி பொதுமக்களுக்கு விற்பனை செய்யாவண்ணம் அதன் விநியோகம் முடக்கி வைக்கப்பட்டது.

மேலும், ஒசூா் வட்டம், கெலமங்கலம் வட்டாரப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் இதுவரை 56 குட்கா கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொடா்ந்து இதுபோன்ற தடைசெய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்துவரும் கடை உரிமையாளா்களின் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு கடை உரிமம் ரத்து செய்வதோடு, கடைகளை நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.