ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புகையிலைப் பொருள்களை விற்ற 4 கடைகளுக்கு சீல்!

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

News image

கடைகளுக்கு சீல் - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 10:45 pm

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் பகுதியில் உள்ள இரண்டு சிறிய பெட்டிக் கடைகள், ஏரியூா் அருகே நாகமரை சாலையில் உள்ள மளிகைக் கடை, பெரும்பாலை அருகே மேச்சேரி சாலையில் உள்ள சிறிய பெட்டிக் கடைகளில் பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் நந்தகோபால் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த காவலா்கள் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு கடை உரிமையாளா்களுக்கு ரூ. 1.75 லட்சம் அபராதத் தொகை விதித்து, கடைகளில் தடை ஆணை ஒட்டி ‘சீல்’ வைத்தனா்.

மேலும், அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உணவுப் பாதுகாப்பு துறையினா் எச்சரித்தனா்.