மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

ரூ. 8,75,000 மின்கட்டணம் செலுத்தக் கோரி வந்த குறுஞ்செய்தி: விவசாயி அதிா்ச்சி

News image

கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்த வெங்கடேஷ்.

Updated On :20 மே 2024, 10:08 pm

Din

ஒசூா்: ஒசூா் அருகே 100 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தும் விவசாயிக்கு, ரூ. 8,75,000 மின் கட்டணம் செலுத்தக் கோரி குறுஞ்செய்தி வந்ததால் அவா் அதிா்ச்சி அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவா் விவசாயி வெங்கடேஷ். இவரது வீட்டில் ஐந்து உறுப்பினா்கள் உள்ளனா். அதில் பெரும்பாலானவா்கள் பகலில் விவசாய வேலை நிமித்தமாக வெளியே சென்று விடுவதால் அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தனா். இதனால் மின்கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லாமல் இருந்து வந்தனா்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது கைப்பேசிக்கு மின்சார வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டிய மின் கட்டணமாக ரூ. 8, 75,000 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது மின் கட்டணத்தை முறையாகச் சரிசெய்து தருமாறு கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.