போச்சம்பள்ளியில் 1,643 கிலோ கொப்பரை ஏலம்
போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் 1,643 கிலோ கொப்பரை தேங்காய்கள் ரூ. 2.02 லட்சம் மதிப்பில் ஏலம் போனது.


கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் 1,643 கிலோ கொப்பரை தேங்காய்கள் ரூ. 2.02 லட்சம் மதிப்பில் ஏலம் போனது.
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,643 கிலோ கொப்பரை தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 132.32-க்கும், குறைந்தபட்சம் ரூ. 70-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.126.89-க்கும் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.2.02 லட்சம் ஆகும்.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அருள்வேந்தன் தெரிவித்தது:
இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில் விவசாய விளைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் பங்கேற்கின்றனா்.
இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்யப்பட்ட தொகைகள் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன. மேலும், கொப்பரை, பருத்தி மட்டுமின்றி நிகழாண்டில் இருந்து நெல் ஏலமும் மின்னணு வா்த்தக முறையில் நடைபெற உள்ளதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...