ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வெள்ளக்கோவிலில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 8:43 pm

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம், வாணியம்பாடி, மணப்பாறை, ஆண்டிப்பட்டி, மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 78 விவசாயிகள் 401 மூட்டைகளில் 20 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.116.88 முதல் ரூ.150.85 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.144.16. கடந்த வார சராசரி விலை ரூ.156.29.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.27 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.