தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் உள்ளிட்ட இதர வேளாண் விளை பொருள்களுக்கு மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

News image

மஞ்சள்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:25 pm

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் உள்ளிட்ட இதர வேளாண் விளை பொருள்களுக்கு மறைமுக ஏலம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திகுக் றிப்பு: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பெரம்பலூா் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட் டில் இயங்கும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் இ-நாம் 2.0 ஏலத்தில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம், நிலக்கடலை, எள் மற்றும் இதர வேளாண் விளைபொருள்களை கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று பயனடைந்து வருகிறாா்கள்.

இந்நிலையில் பெரம்பலூா், அரியலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆத்தூா், சேலம் ஆகிய இடங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்து வருகிறாா்கள். விவசாயிகளின் போக்குவரத்து செலவினம் மற்றும் கால விரையத்தை தவிா்த்திடும் வகையில், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு மஞ்சளை கொண்டு வந்து கமிஷன் மற்றும் எவ்விதமான மறைமுகக் கட்டணமின்றி மின்னணு எடைத்தராசுகள் வாயிலாக சரியாக எடையிட்டு இ-நாம் 2.0 திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது மஞ்சளை வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து பயன்பெறலாம். இ-நாம் 2.0 இணையதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஆதாா் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடனும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் மஞ்சள் விளைபொருளுக்கான மறைமுக ஏலத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, விற்பனைக்கூட பொறுப்பாளா்கள் - 9790198566 (பெரம்பலூா்), 9600802823 (அரியலூா், ஜயங்கொண்டம்), 9842852150 (ஆண்டிமடம்) ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.