பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 30 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பெரம்பலூா் விற்பனைக் குழுக் கட்டுப்பாட்டில் இயங்கும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குள்பட்ட அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட பணியாளா்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளா்கள் இணைந்து மறைமுக ஏலம் குறித்து விவசாயிகளிடையே பிரசாரம் மேற்கொண்டனா்.
அதனடிப்படையில், புதூா், வாலிகண்டபுரம், மழவராயன்நல்லூா், ஆயக்குடி, செங்குணம், வி.ஆா்.எஸ்.எஸ்.புரம், சிறுகுடல், அரசலூா் மற்றும் கீழப்புலியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பங்கேற்றனா்.
பெரம்பலூா் விற்பனைக்குழு தனி அலுவலா் சீ. தெய்வீகன், விற்பனைக்குழுச் செயலா் ப. சந்திரமோகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்று, 30.300 மெட்ரிக் டன் மஞ்சளை குவிண்டால் ஒன்றுக்கு, அதிகபட்ச விலையாக ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 42,53,000-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனா். இதில், வேளாண்மை அலுவலா், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மற்றும் விற்பனைக்கூட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
எனவே, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை நடைபெறும் மறைமுக ஏலத்தில், விவசாயிகள் தங்களது மஞ்சள் விளை பொருளை தரம் வாரியாக பிரித்து கொண்டுவந்து, விளைபொருளின் தரத்துக்கேற்ப அதிக விலைக்கு விற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை 9361389690, 9790198566 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என, பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
கொடுமுடியில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

போச்சம்பள்ளியில் ரூ. 13.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7.760 மெட்ரிக் டன் மஞ்சள் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

