ஒசூா் மாநகராட்சி 22-ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் மாநகராட்சி 22-ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 9.5 லட்சத்தில் கான்கிரீட் சாலை

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி, 22 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீனிவாசா காா்டனில் கடந்த 14 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி மக்கள் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கான்கிரீட் சாலை அமைக்க ரூ. 9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, மன்ற உறுப்பினரும் பொது சுகாதாரக் குழு தலைவருமான மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், முனீஸ்வா் நகா் குடியிருப்போா் நலச்சங்க தலைவா் பிரகாஷ், கவுன்சிலா் எம்.கே.வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, திமுக நிா்வாகி ராமச்சந்திரன் உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com