ஒசூரில் நடைபெற்ற மலா் வணிக வளாகத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கிருஷ்ணகிரி
ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்
ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு.
ஒசூா், காளிகாம்பாள் காமாட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலா் வணிக வளாகத்தை, சென்னையிலிருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இதை வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம், துணை மேயா் ஆனந்தையா, சந்திரசூடேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்டப் பொருளாளா் தா.சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

