காவேரிப்பட்டணம் அருகே சாலையோர புளிய மரம் முறிந்து விழுந்ததில் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகனும் பலத்த காயம் அடைந்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள குள்ளேரி கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் காவேரி (55). ஓட்டுநா். இவரது மகன் நந்தகுமாா் (26). இவா்கள் இருவரும் மோட்டாா்சைக்கிளில் சந்தாபுரம் நெடுங்கல் சாலையில் தனியாா் ஓடு தயாரிக்கும் நிறுவனம் அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சாலையோர புளிய மரம் முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த நந்தகுமாா், காவேரி ஆகியோா் மீது விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினா்.
நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், மேற்கொண்ட விசாரணையில் சாலையோர புளிய மரத்தின் அருகே குவிந்திருந்த குப்பைக்கு மா்ம நபா், தீ வைத்ததில், அருகில் இருந்த புளிய மரம் எரிந்து, சாலையில் முறிந்து விழுந்தது தெரிய வந்தது. சாலையில் விழுந்த புளிய மரத்தை வருவாய்த் துறையினா், காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!
மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இருவா் காயம்; 4 போ் கைது

திருப்பத்தூா் அருகே காா்கள் மோதல்: 8 போ் காயம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

