தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

News image

கொடைக்கானல் கூக்கால் அருகே மரம் முறிந்து விழுந்ததால் சேதமடைந்த காா், மின் கம்பம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:56 pm

கொடைக்கானல் கூக்கால் பகுதியில் திங்கள்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதி முனீஸ்வரன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்தப் பகுதியில் ஆபத்தான நிலையில் பழைமையான யூக்காலி மரம் இருந்தது. இந்த மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த இரண்டு மின் கம்பங்கள், காா் ஆகியவை சேதமடைந்தன.

இதனால் கூக்கால்- பழம்புத்தூா் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மின்தடையால் கிராம மக்கள் அவதி: மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் கூக்கால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அவதியடைந்தனா்.