கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்தனா்.
இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால், பூண்டி உயரழுத்த மின் பாதையில் மரக்கிளை விழுந்துள்ளது. பல மணி நேரம் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் இரவு நேரமாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இயலாத சூழ்நிலை உருவானது. வியாழக்கிழமை காலை மின் பாதையில் ஏற்பட்ட மின்தடை சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

