மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பல மணி நேரத்துக்கு தொடா் மின் தடை ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
மதுரை மாநகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பிறகு இடி, மின்னலுடன் பலத்த
மழை பெய்தது. மழைக்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், காற்று வீசத் தொடங்கியவுடன் கோ. புதூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2.30 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்தது.
இதேபோல, பழங்காநத்தம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு
2 மணி நேரத்துக்கு மேலாகவும், பெத்தானியாபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மின் தடை ஏற்பட்டது. தல்லாகுளம், தமுக்கம், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
தொடர்புடையது

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


