தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

சேத்துப்பட்டில் மழை: மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் மரம் விழுந்து சேதமடைந்த மின் கம்பங்கள்.

News image

சேத்துப்பட்டில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் மரம் விழுந்து சேதமடைந்த மின் கம்பங்கள்.

Updated On :20 மார்ச் 2026, 0:03 am IST

சேத்துப்பட்டு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பலத்த மழை பெய்ததில் மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேத்துப்பட்டில் பகுதியில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் மின்னலும் இடியும் தாக்கின அதனைத் தொடா்ந்து நள்ளிரவு அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால், சேத்துப்பட்டு காவலா் குடியிருப்பு அருகேயுள்ள பழைமை வாய்ந்த மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் வந்து மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.