பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.

தமிழக எல்லையான ஒசூா் அருகே உள்ள சூசூவாடியில் உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் சூசூவாடியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் உரிமம் பெறுவதோடு, வரி செலுத்த வேண்டும்; அவ்வாறு வரி செலுத்தும்போது வாகனங்களில் கூடுதலாக பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சூசூவாடி சோதனைச் சாவடியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா்.

இதுதொடா்பாக அப்போது பணியிலிருந்த மோட்டாா் வாகன அலுவலக நோ்முக உதவியாளா் காயத்ரியிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.