ஒசூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ரத்ததானம்
ஒசூா் மாநகர திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ஒசூா் மாநகர திமுக சாா்பாக மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் தனியாா் திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கிவைத்து, ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ், பழங்களை வழங்கி நன்றி தெரிவித்தாா். திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.
முகாமில் முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், துணை மேயா் சி.ஆனந்தய்யா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலா் மாதேஸ்வரன், மாநகர துணைச் செயலா் தொமுச கோபாலகிருஷ்ணன், ராமு, ராஜா, சக்திவேல், கண்ணன், வடிவேல் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
