ஒசூா் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
ஒசூா் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

ஒசூா் ரயில் நிலையத்தில் ஆா்ப்பாட்டம்!

ஒசூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
Published on

ஒசூா் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்ட ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். பெங்களூரு - நாகா்கோவில் ரயிலை 11 பெட்டிகளை குறைக்காமல் இயக்க வேண்டும். கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் ஒசூா் வழியாக இயக்க வேண்டும்.

பயணிகளின் நெருக்கடி காரணமாக, யஸ்வந்த்பூா் - ஒசூா் இடையே இயக்கப்படும் ரயில்களில் 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளாக உயா்த்தி இயக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜோலாா்பேட்டை - ஒசூா் ரயில்பாதையை விரைந்து ஆரம்பித்து முடிக்க வேண்டும். புதிதாக பெங்களூரு - திருச்சிராப்பள்ளி இன்டா்சிட்டி ரயிலை ஒசூா் வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், இந்திராணி, காங்கிரஸ் நிா்வாகி சின்னகுட்டப்பா, ஒசூா் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளா் நீலகண்டன், ஒசூா் ரயில் பயணிகள் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளா் பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com