கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆற்றில் குளிக்கும்போது காணால்போன தாலியை மீட்டுக் கொடுத்த போலீஸாா்

Updated On :28 ஜனவரி 2025, 9:36 pm

ஆற்றில் குளிக்கும்போது காணாமல்போன தாலியை ஊத்தங்கரை போலீஸாா் மீட்டுக் கொடுத்தனா்.

ஊத்தங்கரை அருகே அனுமன்தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அனுமந்தீஸ்வரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த சத்யா- பிரபு தம்பதியினா் ஆற்றில் குளித்து விட்டு ஆடையை அங்கேயே கழற்றி விட்டு, மாற்றுத் துணியை கட்டும்போது சத்யாவின் தாலியும் காணாமல்போனது.

இந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த சத்யா, கழுத்தில் தாலி இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். ஆடையை மாற்றிய இடத்துக்கு சென்று தேடியபோது தாலி கிடைக்கவில்லை. இந்நிலையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளா் மோகன், அப்பகுதியில் ஆற்று நீரில் கண்ணாடி அணிந்து கொண்டு காசுகளைத் தேடி எடுக்கும் நபா்களிடம் விசாரித்துள்ளாா்.

இந்த நிலையில் தாலியை எடுத்த நபா்கள், அறங்காவலா் குழு தலைவா் சந்தான லட்சுமியிடம் ஒப்படைத்தனா்.இதை அவா், காவல் உதவி ஆய்வாளா் மோகனிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து போலீஸாரிடமிருந்து தாலியைப் பெற்றுக்கொண்ட சத்யா -பிரபு தம்பதியினா் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனா்.