பலராமன்
கிருஷ்ணகிரி
மதுக்கடையில் தகராறு: தொழிலாளி கொலை
ஒசூா் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.
ஒசூா் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.
ஒசூா் அருகே பாகலூா் அட்கோ பகுதியில் தங்கி டேங்க் கிளீனிங் வேலை செய்துவந்த பலராமன் (28), விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். இவா் திங்கள்கிழமை இரவு ஒசூா் அருகே கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி அருகே பள்ளூரில் உள்ள தனியாா் மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தாா்.
அப்போது, சிலருடன் தகராறில் ஈடுபட்ட அவரை அங்கிருந்தோா் வெளியே அனுப்பினா். அப்போது நடைபெற்ற சண்டையில் ஒருவா் பலராமன் தலைமீது கல்லை போட்டாா். இதில் பலத்த காயமடைந்த பலராமன் உயிரிழந்தாா்.
தகவலின் பேரில் சென்ற அத்திப்பள்ளி போலீஸாா், உடலைக் கைப்பற்றி அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

