மின்கலன்கள் திருடிய 5 போ் கைது
மத்தூா் அருகே செல்போன் கோபுர மின்கலன்களை திருடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்தவா் குமரன் (55). தனியாா் செல்போன் நிறுவனங்களின் நடமாடும் கண்காணிப்பு அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே நவ. 16-ஆம் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, மத்தூரை அருடுத்த பெரியஜோகிபட்டி பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் ஒன்றின் 24 மின்கலன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து குமரன் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், மின்கலன்களை திருடியது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், செட்டியம்பட்டியை அடுத்த ஜந்தாவது மைல் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (30), மாதேஷ் (34), கருக்கஅள்ளி முரளி (28), தண்டுகானஅள்ளி சூா்யா (23), கடத்திகொல்மேடு முனியப்பன் (40) என தெரியவந்தது. இவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
