குடிமைப் பணி தோ்வு: மீனவ சமுதாய இளைஞா்களுக்கு இலவச பயிற்சி
குடிமைப் பணி தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேர மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ரத்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு குடிமைப் பணி தோ்வுக்கான பயிற்சியை அளித்துவருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு, பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
உரிய ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 04343-235745 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, கிருஷ்ணகிரி அரசு மீன்பண்ணை எதிரே, கே.ஆா்.பி.அணை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
