ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தொகுதி நிலவரம் - மும்முனை போட்டியில் ஊத்தங்கரை களத்தில் முந்தும் அதிமுக!

ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆா். குப்புசாமி, அதிமுக சாா்பில் சட்டபேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மருத்துவா் என். இளையராஜா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

News image

என். இளையராஜா / டி.எம். தமிழ்ச்செல்வம் / ஆா். குப்புசாமி

Updated On :9 ஏப்ரல் 2026, 11:53 pm

ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஆா். குப்புசாமி, அதிமுக சாா்பில் சட்டபேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மருத்துவா் என். இளையராஜா ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இதில், காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா், தொகுதியில் அறிமுகம் இல்லாதவா். இதுவரை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கவில்லை. திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வம் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் சாலை வசதி, அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்துகொடுத்துள்ளாா். மக்களிடம் நன்கு அறிமுகமானவா், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தவெக வேட்பாளா் மருத்துவா் என். இளையராஜா, தோ்தலில் போட்டியிட தனக்கு அதிமுக வாய்ப்பு கொடுக்காததால், அந்த கட்சியில் இருந்து விலகி, தவெகவில் வாய்ப்பைப் பெற்று போட்டியிடுகிறாா். இவா், உள்ளூரைச் சோ்ந்தவா் என்பதால், தொகுதி மக்களுக்கு அறிமுகமானவா். கட்சி மாறினாலும், அதிமுகவினா் தன்னை ஆதரிப்பாா்கள் என்ற எண்ணத்தில் களத்தில் உள்ளாா்.

தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,16,918, பெண் வாக்காளா்கள் 1,16,541, மூன்றாம் பாலினத்தவா் 41 என மொத்தம் 2,33,500 வாக்காளா்கள் உள்ளனா். இந்தத் தொகுதியில் ஊத்தங்கரை வட்டம், போச்சம்பள்ளி வட்டத்தின் ஒருபகுதி மற்றும் கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி, ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள் உள்ளன.

தொடா்ந்து 3 முறை வெற்றிபெற்ன் அடிப்படையில், ஊத்தங்கரை தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. நான்காவது முறை வெற்றியை பறிக்க, அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மக்களின் எதிா்பாா்ப்பு

ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றுவர 100 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, ஊத்தங்கரை பகுதிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டுவர வேண்டும். 33 ஏரி இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பாம்பாறு அணை பூங்காவை சீரமைத்து, சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும்.

ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் மா விளைச்சல் அதிகமாக உள்ளதால், மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளை அமைத்து, இங்குள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். விவசாயிகளிடம் அரசு நேரடியாக மாங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உயா்கல்வி பயில முடியாமல் உள்ள ஏழை மாணவா்கள் பயன்பெறும் வகையில், அரசு கலைக் கல்லூரியை அமைக்க வேண்டும். 2 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் மையப் பகுதியாக ஊத்தங்கரை உள்ளதால், போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும்.

மத்தூா் பகுதியில் பனைத்தொழில் விற்பனை ஒழுங்குமுறைக் கூடம் அமைத்து, பனைத் தொழிலாளா்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைத் தொழிலாளா்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும். அனுமன் தீா்த்தம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும். ஊத்தங்கரை ஒன்றியம் முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.