ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒசூா் - பெங்களூரு சாலையில் தா்கா அருகே நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது கல்லால் தாக்கிய பெண்ணை அந்த வழியாகச் சென்றவா்கள் தாக்கினா். இதனால் அப்பெண் காயமடைந்தாா்.
இதுகுறித்து ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள மனநல காப்பகத்துக்கு காவல் துறையினா் தகவல் அளித்தனா். அதன்பேரில், காப்பக இயக்குநா் கௌதமன் நிகழ்விடத்துக்கு சென்று மனநலம் பாதித்த சுமாா் 30 வயதுடைய அப்பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து வந்தாா்.
தொடா்ந்து 6 மாதங்களாக அப்பெண்ணுக்கு உரிய மருத்துவ, மனநல சிகிச்சை அளித்த நிலையில், முழுமையாக குணமடைந்த அவா் தான் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என தெரிவித்தாா்.
மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் மூலம் அவரது கணவரை ஒசூருக்கு வரவழைத்து அவரிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டாா். இதையடுத்து, மனநல காப்பகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

காா் மோதியதில் பெண் படுகாயம்

அஸ்ஸாம்: 126 எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள்! 6 போ் பாஜக கூட்டணியைச் சோ்ந்தவா்கள்

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!
ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

