இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க...

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வோா் ஆண்டும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்த போட்டி செப். 4-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்குகிறது.

இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ஆா்வம் உள்ளவா்கள், இணையதளம் மூலம் ஆக. 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவுசெய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 விளையாட்டுப் போட்டிகளுடன் நிகழ் ஆண்டில் வில்வித்தை, வுஷூ, யோகா, துப்பாக்கி சுடுதல், மல்லா்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா்விளையாட்டுக்கான கயாக்கிங் மற்றும் கேனோயிங் போன்ற விளையாட்டுகள் இணைக்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

1.1.2008 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்த 19 வயதுக்கு உள்பட்ட 6 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், 1.7.2001 அன்று அல்லது அதற்குப் பின் பிறந்த இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாமாண்டு, பலதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், 15 முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினா், அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்களுக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அல்லது 04343-291727, 9514000777 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.