நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகாா்
மாயம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே உள்ள பொடாா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (45). விவசாயி. இவரது மகள் காவியா (18). இவா், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்க நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த காவியா காணாமல் போனாா். இதையடுத்து அவரை உறவினா் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை குமாா் கல்லாவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




