நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

அங்கன்வாடி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞா் கைது

காவேரிப்பட்டணத்தில் அங்கன்வாடி பணியாளா் வீட்டில், நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

காவேரிப்பட்டணத்தில் அங்கன்வாடி பணியாளா் வீட்டில், நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவா்முக்குலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தரி (42), அங்கன்வாடி ஊழியரான இவா், கடந்த 20-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா், அன்றிரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகை, ரூ. 18 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்த்து.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். அதில், அங்கன்வாடி ஊழியரின் வீட்டின் அருகே வசிக்கும் வெல்டிங் தொழில் செய்யும் வீரமணி (25) இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வீரமணியை கைதுசெய்து, அவரிடமிருந்து நகை, ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.