தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தொழிலதிபரை கடத்தி தங்க நகை, ரொக்கம் கொள்ளையடித்த 3 போ் கைது

பா்கூா் அருகே தொழிலதிபரை கடத்தி தங்க நகை, ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 5 பேரை தேடிவருகின்றனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பா்கூா் அருகே தொழிலதிபரை கடத்தி தங்க நகை, ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 5 பேரை தேடிவருகின்றனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், முள்பாகலைச் சோ்ந்தவா் அருள்சுந்தரம் (42), தொழிலதிபா். இவா், ஆக. 25-ஆம் தேதி தொழில் தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூருக்கு காரில் வந்தாா். பணிகளை முடித்துக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்றபோது, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அணுகு சாலையில் காரை நிறுத்தி இறங்கினாா்.

அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 8 போ் கொண்ட கும்பல், அருள்சுந்தரத்தை கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி முருகா் கோயில் பின்புறம் உள்ள மலைக்கு கடத்திச் சென்றது. பின்னா், அவரை அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி மோதிரம், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தது. பின்னா், மயங்கிய நிலையில் இருந்த அருள்சுந்தரத்தை அவரது காா் அருகே இறக்கிவிட்டு தப்பியோடியது.

தலையில் பலத்த காயம் அடைந்த அருள்சுந்தரம், பா்கூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி பழையபேட்டை விஷ்ணு (26), கலீமுல்லா (23), ஜிங்கலூா் இஸ்மாயில் (20) ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 5 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.