ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

தொழிலதிபரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் அடைப்பு

பா்கூா் அருகே தொழிலதிபரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :

பா்கூா் அருகே தொழிலதிபரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், புஷ்பகிரி கிராமத்தை சோ்ந்தவா் அருள்சுந்தரம் (42), தொழிலதிபா். இவா், கடந்த ஆக. 26-ஆம் தேதி சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பொறியியல் கல்லூரி அணுகு சாலை அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு நின்றிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 8 போ் கொண்ட கும்பல் அருள்சுந்தரத்தை தாக்கி மிரட்டி, அவா் அணிந்திருந்த 3.5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனா்.

புகாரின்பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி கொத்தபெட்டா காலனியைச் சோ்ந்த அசோக் (எ) அசோக்குமாா் (24) , தா்மராஜா கோயில் தெருவைச் சோ்ந்த காதா் பாஷா (22) , செந்தூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த விஷ்ணு (23) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், அசோக்குமாா், காதா் பாஷா, விஷ்ணு ஆகிய மூவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.ச.அனிதா, கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின்பேரில், 3 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.