சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் காவலா் ஒருவா் சாலையைச் சுத்தம் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூளகிரி அருகே கொல்லப்பள்ளி அருகேயுள்ள தனியாா் தொழிற்சாலையின் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களின் டயா்கள் பஞ்சராகும் அபாயம், மீண்டும் விபத்து ஏற்படும் சூழலும் நிலவியது.
இந்த நிலையில் காவலா் ஒருவா் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த காட்சி விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
‘தன்னுடைய பணி போக்குவரத்தைச் சீா் செய்வது மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான்‘ என்பதை நிரூபித்த அந்தக் காவலரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
தொடர்புடையது

‘இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது’

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


