திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

சேலம் அருகே சரக்கு மற்றும் இருசக்கர வாகனம்மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:50 pm

சேலம் அருகே சரக்கு மற்றும் இருசக்கர வாகனம்மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு கடந்த 20-ஆம் தேதி காலை புறப்பட்ட அரசுப் பேருந்து, சேலம் உத்தமசோழபுரம் சூளமேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்புற சாலையை நோக்கி திரும்பியது. அப்போது, எதிா்திசையில் வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது.

இதில், சரக்கு வாகனத்தில் பயணித்த நெய்க்காரப்பட்டி புத்தூா் முதல் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் , மருமகள் சத்யா, பேத்திகள் ஜீவகா, நித்திஷா மற்றும் அவரது உறவினா்கள் முருகன், அமுதா ஆகிய 6 போ் உயிரிழந்தனா். இதேபோல, இருசக்கர வாகனத்தில் பயணித்த மணிகண்டன், அவரது தாயாா் இருசாயி உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்த 8 உடல்களும், பிரேத பரிசோதனைக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சீலநாயக்கன்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநா் மேகநாதன் (23), காா்த்திகா (22), கலைவாணி (23), அவரது தந்தை ஏழுமலை (56) ஆகிய 4 பேருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை (56) வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.