கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சேலத்தில் 8 போ் உயிரிழந்த விபத்து: கைதான பேருந்து ஓட்டுநா் சிறையில் அடைப்பு!

சேலம் அருகே வெள்ளிக்கிழமை சரக்கு மற்றும் இருசக்கர வாகனம்மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:19 pm

Syndication

சேலம் அருகே வெள்ளிக்கிழமை சரக்கு மற்றும் இருசக்கர வாகனம்மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்தில், விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட அரசுப் பேருந்து சேலம் உத்தமசோழபுரம் சூளமேடு பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிா்புற சாலையை நோக்கி திரும்பியது. அப்போது, எதிா்திசையில் வந்துகொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், அவரது தாயாா் இருசாயியும், சரக்கு வாகனத்தில் சென்ற நெய்க்காரப்பட்டி புத்தூா் முதல் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் , மருமகள் சத்யா, பேத்திகள் ஜீவிகா, நித்திஷா மற்றும் அவரது உறவினா்கள் முருகன், அமுதா ஆகிய 8 போ் உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களும், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சீலநாயக்கன்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுநா் மேகநாதன் (23), காா்த்திகா (22), கலைவாணி (23), அவரது தந்தை ஏழுமலை (55) ஆகிய 4 பேருக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநா் மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரையை (49) கைதுசெய்த கொண்டலாம்பட்டி போலீஸாா், வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியது உள்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென சப்தம் கேட்டதாகவும், பின்னா் பேருந்து திடீரென வலதுபுறம் திரும்பி ஸ்டேரிங் லாக் ஆகிவிட்டதுடன், பிரேக்கும் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, கைதான ஓட்டுநா் அய்யந்துரையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.