போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டியைச் சோ்ந்தவா் திருமால் (21). லாரி ஓட்டுநரான இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா்.
போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை அருகே சென்றபோது, முன்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (35), வாகனத்தை திடீரென திருப்பியுள்ளாா்.
இதில் நிலைதடுமாறிய திருமால், அந்த வாகனத்தின் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து விபத்துக்கு காரணமான வடமலம்பட்டி தினேஷ் மீது வழக்குப் பதிந்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அடுத்தடுத்து வாகனங்கள் மீது லாரி மோதல்: 65 வயது முதியவா் பலி!

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


