குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:31 am IST

கோவை சரவணம்பட்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், உப்பட்டியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா் (26). இவா் தனது மனைவி லீனாவுடன் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்திருந்தாா். இருவரும் கோவை-சத்தி சாலையில், சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பொள்ளாச்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த்குமாா் (33) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம், எதிா்பாராதவிதமாக அலெக்சாண்டரின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். லீனாவும், அரவிந்த்குமாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.