தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒசூா் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்: ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மனு அளிப்பு!

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

ஒசூா் ஹோஸ்டியா சாா்பில் கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கிய பொருளாளா் வடிவேல்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளிலும் முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகள், சமூக அமைப்பினா், குடியிருப்போா் நலச் சங்கம், தொழில் சங்கம், தொழிலாளா் சங்கம், விவசாய சங்க பிரதிநிதிகளை கடந்த 3 நாள்களாக திமுக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி சந்தித்தாா்.

அதன் தொடா்ச்சியாக ஒசூரில் உள்ள தொழில்முனைவோா் மற்றும் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை, கருத்து கேட்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒசூா் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) செயலாளா் வடிவேல், பொருளாளா் ஸ்ரீதா் ஆகியோா் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனா். அதில் ஒசூா் தொழில் துறையினா் நீண்ட நாள் கோரிக்கையான வா்த்தக மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒசூா்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அத்திப்பள்ளியில் இருந்து தமிழகம் வரும் வழியில் சூசூவாடியில் வரவேற்பு வளைவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் நீலகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டு கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கினா்.