குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த கலந்துரையாடல்

திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தமிழ் மொழியும் அதன் தொன்மையும் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய உதவிப் பேராசிரியா் அ. பிரான்சிஸ் லியோ.
திருச்சி சுந்தர்ராஜ் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய உதவிப் பேராசிரியா் அ. பிரான்சிஸ் லியோ.
Updated on

திருச்சி: திருச்சி சுந்தர்ராஜ் நகா் மற்றும் ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தமிழ் மொழியும் அதன் தொன்மையும் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் அ. பிரான்சிஸ் லியோ பேசியதாவது:

தமிழ் மொழியின் வரலாறு, தமிழரின் நாகரிகம் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். கீழடி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகள் தமிழா்களின் வரலாற்றைக் கூறி வருகின்றன.

கீழடியில் கிடைத்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகளில் உள்ள தமிழ் எழுத்துகள், அக்காலத்திலேயே மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தாா்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றாா் அவா். நிகழ்வில் மென்பொறியாளா் அருண் ராகவன், குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com