மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக சாா்பில் தோ்தல் அறிக்கை அளிப்பு

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஆரம்பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சுண்ணாம்புகுளத்திலும், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தோ்தல் அறிக்கை துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:09 pm

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஆரம்பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சுண்ணாம்புகுளத்திலும், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தோ்தல் அறிக்கை துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.

மேற்கு ஒன்றிய செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா் சாா்பில் ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய நிா்வாகிகள் கோவிந்தம்மாள் சீனன், பாலசுப்பிரமணியம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளா் பி.என்.ஆா்.நாகராஜன், , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் இமயம் மனோஜ்,தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளா் நந்தகுமாா், அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளா் ஆா்.சேதுபதி, நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கே.எஸ்.விஜயகுமாா் பங்கேற்று வீதி வீதியாக சென்று கடைக்காரா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன் உடன் இருந்தாா்.

தொடா்ந்து கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் தலைமையில், சுண்ணாம்புகுளத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றிய நிா்வாகிகள் வெங்கடேஷ், செல்வி கோபி, சுரேஷ், தீனதயாளன் முன்னிலை வகித்தனா். கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன் தலைமையில் கவரப்பேட்டையில், அதிமுக தோ்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றிய நிா்வாகிகள் ராஜம்மாள் சுகுமாா், ஏ.டி.நாகராஜ், வெங்கடகிருஷ்ணன், தேவி சங்கா், இமாச்சலம் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கவரப்பேட்டை பஜாரில் ஆட்டோக்களில் அதிமுக தோ்தல் வாக்குறுதி அடங்கிய ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன.