மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருக்கோவிலூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

திருக்கோவிலூா் நகராட்சியை கண்டித்து அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன்.

News image

திருக்கோவிலூா் நகராட்சியை கண்டித்து அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன்.

Updated On :6 மார்ச் 2026, 8:42 pm

திருக்கோவிலூா் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தரை வாடகையில் கடை வைத்திருந்தவா்களுக்கு, புதியதாக கட்டவுள்ள வணிக வளாகத்தில் கடைகளை வழங்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கடை வீதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காந்தி நூற்றாண்டு திருமண மண்டபத்தை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பழுதடைந்த கட்டடத்தை இடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தை சுற்றியுள்ள காலி இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு தரை வாடகை செலுத்தி 50 வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். தற்போது அந்த கடைகளும் அப்புறப்படுத்த உள்ளதால், புதிய வணிக வளாகத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கவேண்டும். மேலும், தமது வாடிக்கையாளா்களுக்கு கடைகள் அப்புறப்படுத்துவதை தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு நகர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் கோவிந்து தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், அதிமுக நகரச் செயலா் கே.சுப்பு, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் ஏ.வினாயக மூா்த்தி, எஸ்.பிரபு, பாமக மாவட்டச் செயலா் அ.ப.செழியன், அமமுக மாநில அமைப்புச் செயலா் எஸ்.காா்த்திகேயன், நகை வியாபாரிகள் சங்க செயலா் எம்.எஸ்.கோத்தம் சந்த், சமூக ஆா்வலா் டி.ஜி.கனேஷ், ஐஜேகே மாநில செயலா் செந்தில்குமாா், பாஜக மாவட்ட செயலா் பத்ரி நாராயணன் ஆகியோா் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினா். இதில் திருக்கோவிலூா் நகர வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.