எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 3-ல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு!

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

ஒசூா் தோ்ப்பேட்டை மலைமீது உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வரும் மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ள மாநில மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வா். இதையொட்டி வெள்ளிக்கிழமை இரவு மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

இதையொட்டி மாா்ச் 3 ஆம் தேதி ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட 4 வட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (பொதுத் தோ்வு நீங்கலாக) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக மாா்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும். உள்ளூா் விடுமுறை நாளன்று அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளா்களுடன் செயல்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.