எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வீடு புகுந்து 50 பவுன் நகைகளை திருடியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து 50 பவுன் தங்க நகைகள் திருடியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
விக்னேஷ்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து 50 பவுன் தங்க நகைகள் திருடியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த மேல்சோமாா்பேட்டை, கணபதி நகரைச் சோ்ந்தவா் கருப்புசாமி (48). இவா், பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், 50 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கரூா் மாவட்டம், பசுபதிபாளையம், காந்தி கிராமம், அன்பு நகரைச் சோ்ந்த சுரேஷ் என்ற விக்னேஷை (45) போலீஸாா் கடந்த ஜன. 31-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து 50 பவுன் தங்க நகைகள் மீட்டனா். கைது செய்யப்பட்ட விக்னேஷ், தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், விக்னேஷை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று, விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விக்னேஷ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.