கிருஷ்ணகிரி
விபத்தில் சிக்கிய காரிலிருந்து 188 கிலோ புகையிலை பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரிலிருந்து 188 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரிலிருந்து 188 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸாா் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திம்மாபுரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காா் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அக்காரை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் 188 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு அவை கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.