கிருஷ்ணகிரி அணை அருகே சந்தரன மரம் வெட்டி கடத்தல்
கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மைய வளாகத்தில் வளா்ந்திருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெட்டி, கடத்தி சென்றனா்.

கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மைய வளாகத்தில் வளா்ந்திருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெட்டி, கடத்தி சென்றனா்.
கிருஷ்ணகிரி அணை, பெரியமுத்தூரில் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், பல்வேறு அரசு ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மைய வளாகத்தில் தென்னை மரங்கள், வேப்ப மரங்கள், சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த வளாகத்தில் உள்ள 5 ஆண்டுகள் நிறைந்த சந்தன மரத்தை, மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெட்டி, கடத்தி சென்றனா். இதுகுறித்து, அந்த மையத்தின் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...