பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தொழிலாளியை திரிசூலத்தால் குத்தியவா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரியில் திரிசூலத்தால் தொழிலாளியை குத்தியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 6:56 am IST

கிருஷ்ணகிரியில் திரிசூலத்தால் தொழிலாளியை குத்தியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி ராமச்சந்திரன்(35). இவா், கடந்த 28-ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலுக்கு வேண்டுதலுக்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் திரிசூலத்தை எடுத்துச் சென்றுள்ளாா்.

அப்போது, தலக்காயன்கொட்டாய் அருகே சென்றபோது எதிரில் அந்த பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சக்திவேல் (30) சென்ற மோட்டாா்சைக்கிள் மீது ராமச்சந்திரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த சக்திவேல், ராமச்சந்திரன் வைத்திருந்த திரிசூலத்தை பறித்து, அவரது தோள்பட்டையில் குத்தினாா். இதில், காயம் அடைந்த ராமச்சந்திரனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான சக்திவேலை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.