ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சுயநினைவை இழக்கச் செய்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

பா்கூா் அருகே சுயநினைவு இழக்கச் செய்து, பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 4:23 am IST

பா்கூா் அருகே சுயநினைவு இழக்கச் செய்து, பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த பி.கொத்தூரை சோ்ந்தவா் தெய்வானை (53). இவரது கணவா் உதயகுமாா் ஆந்திர மாநிலத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறாா்.

புதன்கிழமை தெய்வானை வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் பித்தளை பொருள்கள், நகைகளுக்கு பாலிஷ் செய்துகொடுப்பதாக கூறியுள்ளாா். அவரிடம் வீட்டில் இருந்த ஒரு பித்தளை விளக்கை சுத்தம் செய்ய தெய்வானை கொடுத்தாா். அப்போது, அந்த நபா் ரசாயன பொடியை கையில் தடவி பாா்க்கும்படி கூறியுள்ளாா். அதன்படி, தெய்வானை செய்தபோது அவா் சுயநினைவை இழந்தாா். சிறிது நேரத்துக்கு பிறகு நினைவு திரும்பியபோது, அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இந்த குற்றச்சம்பவத்தில் இரண்டு நபா்கள் ஈடுபட்டதும், அவா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.