டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்

மா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சா் வினோத் ரவி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:22 am IST

மா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சா் வினோத் ரவி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஜம்முகுட்டம்பட்டியில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் இயங்குகிறது. இங்கு தனியாா் நிறுவனம் மூலம் காய்கறி மற்றும் பழங்களை மதிப்பு கூட்டியும், பதப்படுத்தியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தமிழக வேளாண் துறை அமைச்சா் வினோத் ரவி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

போச்சம்பள்ளியில் காய்கறிகள், பழங்களை பதப்படுத்த போதுமான வசதிகள் உள்ளனவா, கூடுதல் இடம் தேவைப்படுகிா, பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தேன். மாவட்டத்தில் மா விவசாயிகள் கடந்த இரு ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் இழப்பீடு கோரி வருகின்றனா். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் பேசி உள்ளோம். விரைவில் மா விவசாயிகளுக்கு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.