பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சுற்றுலா மேம்பாடு குறித்த சிறப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த சிறப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 11:45 pm IST

தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த சிறப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

அவா் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கன்னியாகுமரி மாவட்டம், சா்வதேச அளவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இங்கு சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா வளா்ச்சி தொடா்பாக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி சில ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத் தலங்களை ஒருங்கிணைத்து, மாநிலத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும்.

போதைப்பழக்கம் தனிநபரை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த குடும்பத்தையே சீரழிக்கக் கூடியது. எனவே, இதை வேரோடு அகற்ற விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். போதைப் பழக்கத்தை ஒழிக்க தமிழக முதல்வா் பிரத்யேகமான போதை தடுப்புப் பிரிவை உருவாக்கியுள்ளாா். இதன்மூலம் கல்வி நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் காவல் துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.