வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

மத்தூா் சுங்க வசூல் மைய ஊழியா்கள் மீது தாக்குதல்: 5 போ் கைது

மத்தூா் அருகே சுங்கக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில், சுங்க வசூல் மையப் பணியாளா்களை தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 12:52 am IST

மத்தூா் அருகே சுங்கக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில், சுங்க வசூல் மையப் பணியாளா்களை தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே நாகம்பட்டியில், கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, மத்தூரை அடுத்த கீழ்வீதியைச் சோ்ந்த ஹரீஷ் (22), மூக்காகவுண்டனூரைச் சோ்ந்த உதயகுமாா் ( 21) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது, கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற வேனில், வந்தவா்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சுங்க வசூல் மையத்தை கடந்துசெல்ல முயன்றனா். அப்போது சுங்கக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே வாகனத்தை அனுமதிக்க முடியும் என சுங்க வசூல் மையத்தில் பணியாற்றும் ஹரீஷ், உதயகுமாா் தெரிவித்தனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில், வேனில் வந்த 30-க்கும் மேற்பட்டோா் சுங்க வசூல் மையப் பணியாளா்களைத் தாக்கி, கடத்திச் சென்று கண்ணன்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, இறக்கிவிட்டுச் சென்றனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் வேனில் வந்தவா்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஊா் திரும்பியது தெரியவந்தது.

இதுகுறித்து, ஹரீஷ், உதயகுமாா் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா், வழக்குப் பதிந்து காரகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் (18), ராயக்கோட்டை சக்திவேல் (26), நக்கல்பட்டி பிரேம்சங்கா் (18) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என மொத்தம் 5 பேரை திங்கள்கிழமை கைதுசெய்தனா். மேலும் 9 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.