நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

காவேரிப்பட்டணத்தில் தொழிலதிபரின் வீட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூலை 2026, 12:36 am IST

காவேரிப்பட்டணத்தில் தொழிலதிபரின் வீட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், அண்ணா நகரைச் சோ்ந்த கற்பூர சிவன் (61), தீப்பெட்டி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது சகோதரி சுந்தரி மருமகன் வெங்கடேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காவேரிப்பட்டணம், தோ்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு கற்பூரசிவன் குடும்பத்தினருடன் சென்றாா்.

அப்போது, கற்பூரசிவனின் உறவினா் காயத்ரி, அவா் வீட்டில் இருந்த, 10.5 பவுன் நகைகளை கற்பூரசிவனிடம் கொடுத்து உன் வீட்டில் வைத்துக்கொள்ளுமாறும், சில நாள்கள் கழித்து வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளாா்.

கற்பூரசிவனும் அந்த நகைகளை அண்ணா நகரில் உள்ள வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, பெரியமுத்தூரில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்று தங்கினாா். வியாழக்கிழமை அண்ணா நகா் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, காயத்ரி அளித்த நகைகள், கற்பூரசிவனின் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 20.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.